Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 13 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. 80 சதவீத போனஸ் அறிவிப்பு..!

முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு (ஏப்ரல்-ஜூன் 2025) செயல்திறன் அடிப்படையிலான போனஸை அறிவித்துள்ளது. இந்த முறை சராசரியாக 80 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய உள் தகவல் தொடர்பில் தெரிவித்துள்ளது.

ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் சிறந்த நிதி முடிவுகள் எதிர்பார்ப்புகளை மீறியதை அடுத்து இந்த போனஸ் முடிவு எடுக்கப்பட்டது. இந்த போனஸ் முக்கியமாக பேண்ட் 6 மற்றும் அதற்குக் கீழே உள்ள ஊழியர்களுக்கு, அதாவது ஜூனியர் மற்றும் மிட்-லெவல் ஊழியர்களுக்கு பொருந்தும். ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டைப் பொறுத்து போனஸ் சதவீதம் மாறும். PL6 (Performance Level) மட்டத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 85 சதவீத போனஸ் கிடைக்கும், மிகக் குறைந்தவர்களுக்கு 75 சதவீதம் கிடைக்கும். இதேபோல், PL4 மட்ட ஊழியர்களுக்கு 80 முதல் 89 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.

கடந்த காலாண்டில் தகுதியான ஊழியர்களுக்கு சராசரியாக 65 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அது 80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்து ரூ.6,921 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வருவாய் 7.5 சதவீதம் அதிகரித்து ரூ.42,279 கோடியாக உயர்ந்துள்ளது.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

Sh5tCA