இந்தியா

ராமர் கோயிலுக்கு அம்பானி குடும்பம் கொடுத்த நன்கொடை!

நாட்டின் எந்த ஒரு மதிப்புமிக்க நிகழ்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் அம்பானி குடும்பம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும் பங்களித்துள்ளது. அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ராம் லல்லா பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ராமரை தரிசித்தார்.

இந்நிலையில், ராமர் கோவிலுக்கு அம்பானி குடும்பத்தினர் பெரும் நன்கொடை அறிவித்தனர். ராமபூமி கோயில் அறக்கட்டளையை முகேஷ் அம்பானி சந்தித்து ரூ.2.51 கோடி காசோலையை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்துடன் 33 கிலோ தங்கமும் ராம்லல்லாவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ two = 7

Back to top button
error: