இந்தியா

நாட்டில் புதிய JN.1 வகை கொரோனா தொற்று 20 பேருக்கு இருப்பது உறுதி!!

கொரோனா (கோவிட்) JN.1 இன் புதிய மாறுபாடு மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கோவாவில் 18 பேர், கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் உட்பட மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) தரவு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இன்று 614 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளன, இதன் மூலம் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 2,311 ஆக உள்ளது.

நாட்டில் கணிசமான அளவு கோவிட் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சர் மனசுக் மாண்டவியா இன்று ஒரு கூட்டத்தை நடத்தினார், மேலும் மக்களை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =

Back to top button
error: