ஆரோக்கியம்

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!

நமது நாட்டில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பல அந்நிய நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக ப்ரக்கோலி இருக்கிறது.

இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர்.

தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்தகைய ப்ரோக்கோலியை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கப் ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதிலும் 5 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே இதில் உள்ளது. இதில் கொழுப்புகள் சிறிதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கப் ப்ரோக்கோலியில் நாம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் கே சத்தானது 250% நிறைந்து உள்ளது.

மேலும், நாம் உடலுக்கு ஒரு நாள் விதம் தேவைப்படும் வைட்டமின்களான ஏ, பி 6, பி 2 மற்றும் ஈ, அத்துடன் பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தினசரி தேவையை விட 10% க்கும் அதிகமாக உள்ளது மற்றும் 5% சதவீதத்திற்கும் குறைவான மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு , கால்சியம் மற்றும் செலினியமும் அடங்கி உள்ளது.

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கப் சமைக்கப்படாத ப்ரோக்கோலியில் 2 முதல் 3 கிராம் வரை ஃபைபர் சத்து நிறைந்து உள்ளது. இது நமது உடலின் நல்ல செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நோயினால் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நமது மனநிலையுடன் பிணைக்கப்பட்டுள்ள குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. பொதுவாகவே, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் ஒழுங்குமுறைக்கும் நிலையான ஆற்றலுக்கும் உதவுகிறது.

ப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது.

மேலும், நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.

எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலியை பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty eight − = twenty two

Back to top button
error: