வணிகம்

மே 04, 2024: தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு

சென்னையில் இன்று (மே 04) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 52,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொடுவதும், திடீரென விலை குறைவதுமாக இருந்து வருகிறது. இதன்படி நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 52,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 0.50 காசுகள் குறைந்து 86.50 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 86,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் விலை 55 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், தற்போது 53 ஆயிரத்துக்கும் கீழ் சென்றதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy eight = seventy nine

Back to top button
error: