
பாரத ஸ்டேட் வங்கி ஆனது புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 541 புரொபேஷனரி அதிகாரி (Probationary Officers) காலியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் :
Probationary Officers – 541 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
General/ EWS/ OBC – ரூ.750/-
மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செயல்முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary, Main Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.07.2025 க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://sbi.co.in/documents/77530/52947104/1_Detailed_Adv.2025_23.06.2025.pdf/54ca0942-3de1-afc4-45e8-f679fc552e7b?t=1750741324277