Skip to content
Daily Tamilnadu
வியாழன், 27 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஐடிபிஐ வங்கியில் 1,300 பணியிடங்களுக்குப் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

மும்பை: இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ (IDBI) வங்கி, தனது கிளைகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள இந்த அறிவிப்பு, வங்கித் துறையில் நுழையக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

பணி விவரங்கள் மற்றும் காலியிடங்கள்

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இரண்டு முக்கியப் பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்:

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (Junior Assistant Manager): 1,100 பணியிடங்கள்.

அசிஸ்டண்ட் மேனேஜர் (Assistant Manager – Grade A): 200 பணியிடங்கள்.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.

அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், வங்கி அல்லது நிதிச் சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

வயது வரம்பு மற்றும் ஊதியம்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் (அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் பொருந்தும்).

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர்: ஆண்டுக்கு ரூ. 6.14 லட்சம் முதல் ரூ. 6.50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

அசிஸ்டண்ட் மேனேஜர்: மாத ஊதியமாக ரூ. 36,000 முதல் ரூ. 60,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.idbibank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 19, 2026 ஆகும்.

வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் இந்தக் காலக்கெடு முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

h46rM9

Advertisement
Advertisement