15 நிமிட உணவு விநியோகச் சேவையான ‘Snacc’-ஐ மூடியது ஸ்விக்கி!
பெங்களூரு: பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே தனது 15 நிமிட துரித விநியோகச் சேவையான ‘Snacc’-ஐ மூடுவதாக அறிவித்துள்ளது.
Zepto மற்றும் Blinkit போன்ற நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில், இந்த வணிகத்தில் போதிய லாபம் இல்லாததாலும் அதிகரித்து வரும் இழப்புகள் காரணமாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால வளர்ச்சி மற்றும் லாபகரமான வணிகப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்தச் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிற்றுண்டிகள் மற்றும் பானங்களை விநியோகித்து வந்த இந்தத் தளத்தின் விற்பனை அளவு குறைவாக இருந்ததே இதன் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments