
மேஷம்
எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
மிதுனம்
தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சி பலிதமாகும் நாள்.
கடகம்
எதையும் தாங்கும் மனோ பலனும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
சிம்மம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். நன்மை நடக்கும் நாள்.
துலாம்
அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழையகடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.
தனுசு
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.
மகரம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கும்பம்
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். சகோதர வகையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.