ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (23-05-2025)

இன்றைய நாள் (23-05-2025)

விசுவாவசு-வைகாசி 9-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

உத்திரட்டாதி நண்பகல் 12.25 வரை பின்பு ரேவதி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூரம், உத்திரம்

இன்றைய ராசிபலன் :-

மேஷம் :

இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.

ரிஷபம் :

இன்று வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம்.

மிதுனம் :

இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.

கடகம் :

இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம்.

சிம்மம் :

இன்று தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கன்னி :

இன்று கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள்.

துலாம் :

இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.

விருச்சிகம் :

இன்று வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும்.

தனுசு :

இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

மகரம் :

இன்று குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

கும்பம் :

இன்று கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

மீனம் :

இன்று சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது நலம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: