
இன்றைய நாள் (21-05-2025)
விசுவாவசு-வைகாசி 7-புதன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
சதயம் பகல் 2.57 வரை பின்பு பூரட்டாதி
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நல்லன நடக்கும் நாள்.
ரிஷபம்
முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்கு வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.
கடகம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.
கன்னி
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரி சில சூட்சுமங்களைப் சொல்லி தருவார். அமோகமான நாள்.
துலாம்
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.
தனுசு
கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் மதிப்பு உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.