இன்றைய நாள் (26-01-2025)
குரோதி-தை 13-ஞாயிறு-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:30 – 8:30
மாலை 3:00 – 4:00
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை 1:30 – 2:30
திதி
துவாதசி இரவு 8.17 வரை பின்பு திரயோதசி.
யோகம்
இன்று காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு காலை 07.49 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்
நட்சத்திரம்
கேட்டை காலை 7.49 வரை பின்பு மூலம்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ரோகிணி
இன்றைய ராசிபலன்கள் :-
மேஷம் :
இன்று நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.
ரிஷபம் :
இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நாளிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
மிதுனம் :
இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
கடகம் :
இன்று சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் நாளிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
சிம்மம் :
இன்று பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள்.
கன்னி :
இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.
துலாம் :
இன்று உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம் :
இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
தனுசு :
இன்று குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். ஆனால் அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.
மகரம் :
இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான நாளிது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.
கும்பம் :
இன்று மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.
மீனம் :
இன்று தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும்.
இன்றைய நாள் (25-01-2025)
குரோதி-தை 12-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:30 – 8:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை 9:30 – 10:30
திதி
ஏகாதசி இரவு 7.34 வரை பின்பு துவாதசி.
யோகம்
இன்று காலை 06.29 வரை சித்தயோகம் பின்பு காலை 06.34 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
நட்சத்திரம்
அனுஷம் காலை 6.29 வரை பின்பு கேட்டை முழுவதும்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
கார்த்திகை
இன்றைய ராசிபலன்கள் :-
மேஷம் :
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
ரிஷபம் :
இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் :
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.
கடகம் :
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும்.
சிம்மம் :
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி :
இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
துலாம் :
இன்று கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
விருச்சிகம் :
இன்று கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
தனுசு :
இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
மகரம் :
இன்று உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.
கும்பம் :
இன்று நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
மீனம் :
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும்.
இன்றைய நாள் (24-01-2025)
குரோதி-தை 11-வெள்ளி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 12:30 – 1:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 1:30 – 2:30
மாலை 6:30 – 7:30
திதி
தசமி மாலை 6.22 வரை பின்பு ஏகாதசி.
யோகம்
இன்று முழுவதும் சித்தயோகம்
நட்சத்திரம்
விசாகம் அதிகாலை 4.29 வரை பின்பு அனுஷம் முழுவதும்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பரணி
இன்றையராசிபலன்கள் :-
மேஷம் :
இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
ரிஷபம் :
இன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். கவனம் தேவை.
மிதுனம் :
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும்.
கடகம் :
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் நடக்கும். ஆனாலும் மூன்றாவது மனிதரின் தலையீட்டால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
சிம்மம் :
இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன, மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.
கன்னி :
இன்று பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் சூரியன் 6ல் மறைவு பெறுவதால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மேலிடத்தின் கனிவான பார்வை பெறுவீர்கள். முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.
துலாம் :
இன்று பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
விருச்சிகம் :
இன்று மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். ஆனாலும் திடீர் போட்டி இருக்கும்.
தனுசு :
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நேரத்தை வீணடித்தல் கூடாது. முடிந்தவரை வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து வாக்கு கொடுக்கவும். உத்தியோக உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
மகரம் :
இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கும்பம் :
இன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.
மீனம் :
இன்று எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பிக்கும் எந்த விஷயத்திலும் ஏற்றம் உண்டு.
இன்றைய நாள் – (23-01-2025)
குரோதி-தை 10-வியாழன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
கௌரி நல்ல நேரம்
காலை 12:30 – 1:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
விசாகம் இன்று முழுவதும்.
திதி
நவமி மாலை 4.45 வரை பின்பு தசமி.
யோகம்
இன்று முழுவதும் சித்தயோகம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
அசுபதி
இன்றைய ராசிபலன்கள்:-
மேஷம் :
இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.
ரிஷபம் :
இன்று உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.
மிதுனம் :
இன்று மனை, வீடு சம்பந்தமாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற உடையவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.
கடகம் :
இன்று பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வேலைகளில் நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆர்டர்கள் எளிதில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமாக அவற்றை நிறைவு செய்வீர்கள்.
சிம்மம் :
இன்று உங்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்களின் மீது விழும். உங்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
கன்னி :
இன்று குடும்பத்தை விட்டு பிரிந்திருந்து வேலை பார்த்தவர்கள் தற்போது குடும்பத்தினரிடம் மீண்டும் சேர வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.
துலாம் :
இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆனாலும் தாய் வழி உறவினர்களுடன் சற்று ஒதுங்கி யிருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.
விருச்சிகம் :
இன்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அலர்ஜி போன்று ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு :
இன்று பாராட்டுகள் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஆனாலும் அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல பெயர் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.
மகரம் :
இன்று தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
கும்பம் :
இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.
மீனம் :
இன்று எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.
இன்றைய நாள் – (17-01-2025)
குரோதி-தை 4-வெள்ளி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 12:30 – 1:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
மகம் பகல் 2.24 வரை பின்பு பூரம்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திராடம், திருவோணம்
இன்றைய ராசிபலன்கள் :-
மேஷம் :
இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள்.
ரிஷபம் :
இன்று உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.
மிதுனம் :
இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள்.
கடகம் :
இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும்.
சிம்மம் :
இன்று வியாபாரத்தில் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். தூரத்திலிரிந்து அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள்.
கன்னி :
இன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். பிள்ளைகளுக்கு நினைத்தபடி உயர்கல்வி அமையும்.
துலாம் :
இன்று தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும்.
விருச்சிகம் :
இன்று வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகிச்செல்லும். திருப்தியான பணவரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
தனுசு :
இன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனை ஆகும்.
மகரம் :
இன்று திருமணப் பேச்சுகள் கைகூடும். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் எண்ணம் ஈடேறும். வீடு மனை தொடர்பான அலுவல்கள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட்டப்படுவார்கள்.
கும்பம் :
இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல லாபத்தை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மீனம் :
இன்று வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.
இன்றைய நாள் (10-01-2025):
குரோதி-மார்கழி 26-வெள்ளி-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 12:30 – 1:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
கார்த்திகை பகல் 1.41 வரை பின்பு ரோகிணி.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
சித்திரை, சுவாதி
இன்றைய ராசிபலன்கள் :-
மேஷம் :
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
ரிஷபம் :
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
மிதுனம் :
இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். வழக்குகள் பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக வேலைகளை செய்வது வெற்றிக்கு உதவும்.
கடகம் :
இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.
சிம்மம் :
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.
கன்னி :
இன்று குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.
துலாம் :
இன்று எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எடுத்த வேலைகளை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம் :
இன்று காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும்.
தனுசு :
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
மகரம் :
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.
கும்பம் :
இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற நன்கு உழைக்க வேண்டி இருக்கும். மேலிடம் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.
மீனம் :
இன்று மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.
இன்றைய நாள் (08-01-2025):
குரோதி-மார்கழி 24-புதன்-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
அசுபதி மாலை 4.35 வரை பின்பு பரணி.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
உத்திரம், ஹஸ்தம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம் :
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
ரிஷபம் :
இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்.
மிதுனம் :
இன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.
கடகம் :
இன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம் :
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும்.
கன்னி :
இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
துலாம் :
இன்று எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.
விருச்சிகம் :
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
தனுசு :
இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம் :
இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
கும்பம் :
இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
மீனம் :
இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய நாள் (04-01-2025)
குரோதி-மார்கழி 20-சனி-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 10:30 – 11:30
மாலை 4:30 – 5:30
கௌரி நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
சதயம் இரவு 10.51 வரை பின்பு பூரட்டாதி.
சந்திராஷ்டமம்
இன்று இரவு 10.51 வரை பூசம் பின்பு ஆயில்யம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம் :
இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் :
இன்று எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.
மிதுனம் :
இன்று இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
கடகம் :
இன்று எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
சிம்மம் :
இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
கன்னி :
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.
துலாம் :
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
விருச்சிகம் :
இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது.
தனுசு :
இன்று காரிய வெற்றி உண்டாகும். சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
மகரம் :
இன்று எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும்.
கும்பம் :
இன்று புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.
மீனம் :
இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.
மேஷம் :
இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும்.
ரிஷபம் :
இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
மிதுனம் :
இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம் :
இன்று பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.
சிம்மம் :
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவதுநல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
கன்னி :
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
துலாம் :
இன்று மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம் :
இன்று எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
தனுசு :
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
மகரம் :
இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.
கும்பம் :
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.
மீனம் :
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மேஷம் :
இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.
ரிஷபம் :
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம் :
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
கடகம் :
இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.
சிம்மம் :
இன்று எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.
கன்னி :
இன்று காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
துலாம் :
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
விருச்சிகம் :
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
தனுசு :
இன்று அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கவனத்தை சிதற விடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். கூடுதலாக அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
மகரம் :
இன்று மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கும்பம் :
இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.
மீனம் :
இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.