ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (20-05-2025)

இன்றைய நாள் (20-05-2025)

விசுவாவசு-வைகாசி 6-செவ்வாய்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

அவிட்டம் மாலை 3.48 வரை பின்பு சதயம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

பூசம், ஆயில்யம்

இன்றைய ராசிபலன் :-

மேஷம் :

இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

ரிஷபம் :

இன்று பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.

மிதுனம் :

இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் பாசம் முழுமையாக கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் :

இன்று சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.

சிம்மம் :

இன்று சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.

கன்னி :

இன்று எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

துலாம் :

இன்று உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள்.

விருச்சிகம் :

இன்று ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர்.

தனுசு :

இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது.

மகரம் :

இன்று கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும்.

கும்பம் :

இன்று இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

மீனம் :

இன்று உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: