இன்றைய ராசிபலன் (19-07-2025)
இன்றைய நாள் (19-07-2025)
விசுவாவசு-ஆடி 3-சனி-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:30 – 1:15
மாலை 9:30 – 10:30
நட்சத்திரம்
பரணி நள்ளிரவு 12.13 வரை பின்பு கார்த்திகை.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
ஹஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரையைத் தருவார்கள். உற்சாகமான நாள்.
ரிஷபம்
இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மாலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மிதுனம்
கடினமான வேலையையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும் . தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்
சமயோசிதமாகவும். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.
கன்னி
அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
விருச்சிகம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.
தனுசு
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
மகரம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
மீனம்
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சிலருக்கு சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
Posted in: ஜோதிடம்