இன்றைய ராசிபலன் (12-10-2025)
மேஷம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
கடகம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
தனுசு
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக சிலருக்கு அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
மகரம்
குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.
Posted in: ஜோதிடம்