வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!
சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.