இந்தியாதமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி திடீர் பயணம்!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரப் பயணமாக திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அமித்ஷாவிடம் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு தயாராகி வரும் நிலையில், ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty − forty one =

Back to top button
error: