தமிழ்நாடு

ஜனவரி 08, 2024: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ‌.160 சரிவு

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தங்கம் விலை குறைவால் மக்கள் நகைக் கடையை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

தங்கம் விலை இன்று (ஜன. 8) ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,300க்கும், ஒரு சவரன் தங்கம் 50,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− three = one

Back to top button
error: