தமிழ்நாடுவிளையாட்டு

கேலோ இந்தியா: தமிழ்நாடு அணி 2வது இடம்!!

தமிழ்நாட்டின் பல நகரங்களில் நடந்த 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 19ம் தேதி துவங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

இப்போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது.

38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.

35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெறுகிறது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− four = four

Back to top button
error: