இந்தியா

இந்த 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தற்போது வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, பூத் சிலிப் (வாக்காளர் தகவல் அட்டை) மூலம் வாக்காளர் விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்படும் என்றும், அதைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களின் விவரங்கள்:

  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை
  • வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள்
  • ஓட்டுநர் உரிமம்
  • மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் பணியாளர் அடையாள அட்டை
  • வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
  • இந்திய கடவுச்சீட்டு
  • ஓய்வூதிய ஆவணம்
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  • மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • நாடாளுமன்ற சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள்
  • இயலாமைக்கான தனித்துவ அட்டை ஆகிய 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்க இயலும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty three + = 37

Back to top button
error: