
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சமீப காலமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றுப் பிரச்சினை காரணமாக சோனியா டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், சமீப காலமாக சோனியா அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது காங்கிரஸ் வட்டாரங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.