இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் நிறைவு: தியாகிகளுக்கு பிரதமர் மோடி, உயரதிகாரிகள் அஞ்சலி!

2001-ல் நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

22 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 5 தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து 9 பேரைக் கொன்றனர். அவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 5 பேர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கான்ஸ்டபிள், இரண்டு நாடாளுமன்ற காவலர்கள் மற்றும் ஒரு பூங்கா ஊழியர் உயிரிழந்தனர்.

துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty three + = 58

Back to top button
error: