இந்தியா

துபாய் சென்ற பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்

ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை உச்சி மாநாடு துபாய் எக்ஸ்போ சிட்டி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, துபாய் பால்ம் பகுதியில் இந்திய சமூகத்தை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார், அப்போது துபாயில் வசிக்கும் இந்திய மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின், நேற்று காலை மாநாடு நடைபெறும் துபாய் எக்ஸ்போ சிட்டி வளாகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்று பேசினார். பின்னர், பிரதமர் மோடி அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்தபடி புகைப்படம் எடுத்தார். தொடர்ந்து, அங்கு நடந்த கூட்டத்தில் பங்கேற்று, வளாகத்திற்கு வருகை தந்த உலக தலைவர்களிடம் பேசினார்.

இந்நிலையில், துபாயில் நடந்த உலக காலநிலை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 40 = forty eight

Back to top button
error: