இந்தியா

NEET UG விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான NEET UG 2024 விண்ணப்ப காலக்கெடு இம்மாதம் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, விண்ணப்ப காலக்கெடு சனிக்கிழமை (மார்ச் 9) முடிவடைந்தது, ஆனால் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகளின்படி விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

NEET UG தேர்வு நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பியுஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் படிப்புகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வு நடத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ eighty two = eighty six

Back to top button
error: