இந்தியா

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

மக்களவையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், லோக்சபா தேர்தலை, ஏப்ரல், மே மாதங்களில் நடத்த, தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் அட்டவணை நாளை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ fifty six = 58

Back to top button
error: