இந்தியா

சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதத்தை 8.20 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

சிறு சேமிப்பு டெபாசிட்தாரர்களுக்கு  மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டாளர்களை, அதாவது PPFக்கு மத்திய அரசு மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. முன்னதாக சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதங்கள் 202324 முதல் காலாண்டில் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதாவது, நடப்பு நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் 0.6 சதவீதம் உயர்த்தியுள்ளது.

நிதி அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 31, 2024 வரையிலான சேமிப்பு வைப்புகளுக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். ஒரு வருட கால வைப்புத்தொகைக்கு 6.9 சதவீத வட்டியும், 2 வருட கால வைப்புத்தொகைக்கு 7 சதவீத வட்டியும், 5 வருட கால வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டியும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = thirty nine

Back to top button
error: