இந்தியா

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்!

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி(86) மாரடைப்பு காரணமாக காலமானார்.

கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜோஷியின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty six − = 63

Back to top button
error: