இந்தியா

ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்கிறார்!

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் பஜன் லால் சர்மா இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்.

ராஜஸ்தானின் துணை முதல்வராக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 115 இடங்களை வென்றது, அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸ் 69 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 200 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபைக்கு 199 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty six + = 60

Back to top button
error: