இந்தியா

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 விண்கலம்!!

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது.

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோவின் சார்பில் கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லங்கரேஞ்சியன் புள்ளிக்கு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சூரியனை முதல்முறையாக 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான அலை நீளத்தில் புகைப்படம் எடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் சாதனை படைத்துள்ளது.

அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy four = seventy seven

Back to top button
error: