காற்றின் திசை மாற்றம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 14 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் மிதமான மழை மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.
நாளை 8 மாவட்டங்களில் கனமழை
நாளை (வியாழக்கிழமை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.