அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் எல்கே. அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி வெளியான ‘சிறை’ திரைப்படம், சினிமா விமர்சகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஏகோபித்த பாராட்டுகளுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெறும் 6 கோடி ரூபாய் என்ற மிகச்சிறிய பட்ஜெட்டில் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது உலக அளவில் 31.58 கோடி ரூபாய் வசூலித்து அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதாகப் படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தரமான திரைக்கதையும், எதார்த்தமான நடிப்பும் இருந்தால் பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாமலேயே பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள இப்படம், சிறிய முதலீட்டில் படம் எடுக்கும் இளம் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.