திருமண தடை நீக்கும் ராஜதுர்க்கை!!
தர்மபுரி காமாட்சி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை, ராஜதுர்க்கை என்று அழைக்கிறார்கள். இந்த அம்மனுக்கு சாத்திய மாலையை திருமண தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள்.
அவர்கள் இந்த மாலையுடன் மூன்று முறை ஆலயத்தை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் உள்ள நாக கன்னியர் அருகே அந்த மாலையை ஒன்பது துண்டுகளாக்கி போட்டு விடுவார்கள்.
பிறகு ராஜ துர்க்கை அம்மனை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments