Skip to content
Daily Tamilnadu
திங்கள், 27 ஜூலை 2026
BREAKING
சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!
Advertisement

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்ப பெண்கள் செய்ய வேண்டியது!

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.த்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.

காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

Advertisement

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

Advertisement

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

bCXh8c

Advertisement
Advertisement