Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 22 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

இன்றைய ராசிபலன் (27-04-2026)

மேஷம்

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மாலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கடகம்

சொத்துப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழையசரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்

அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

கன்னி

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு மரியாதை கூடும் நாள்.

தனுசு

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாகஅமையும். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.

மீனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

mE5ckk