Skip to content
Daily Tamilnadu
புதன், 14 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

ஒரே சார்ஜில் 320 கி.மீ. தூரம் செல்லும்.. ஓலாவின் புதிய மாடல் ஸ்கூட்டர் வெளியீடு!

முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், இந்திய சந்தையில் மற்றொரு புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக தூரம் செல்லும் திறன் மற்றும் சிறந்த செயல்திறனை நோக்கமாகக் கொண்டு, இந்நிறுவனம் S1 X+ 5.2 kWh வேரியண்ட்டை இன்று அறிமுகப்படுத்தியது.

ஒரே சார்ஜில் 320 கி.மீ. தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ. 1,29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விலை ஏப்ரல் 15 வரை மட்டுமே கிடைக்கும் என அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர், ஓலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 4680 பாரத் செல் தொழில்நுட்பத்துடன் கூடிய 5.2 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது மணிக்கு 125 கி.மீ. உச்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. 11 kW மிட்-டிரைவ் மோட்டாருடன் வரும் இந்த ஸ்கூட்டரில், பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்த மாடல் ஓலாவின் ஜெனரேஷன் 3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் அறிமுகத்துடன், ஓலாவின் தயாரிப்பு வரிசையில் மொத்தம் ஒன்பது ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

6acJAN