Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 26 ஜூலை 2026
BREAKING
சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (21-03-2026)

மேஷம்

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

Advertisement

ரிஷபம்

பொருளாதாரம் ஏற்ற – இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கடகம்

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எனினும் எதிர்பார்த்த லாபம் உண்டு. மொத்தத்தில், உங்களது திறமை மற்றும் விடா முயற்சி கொண்டு சோதனைகளை சாதனையாக மாற்றும் நாள்.

Advertisement

சிம்மம்

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எனினும் எதிர்பார்த்த லாபம் உண்டு. மொத்தத்தில், உங்களது திறமை மற்றும் விடா முயற்சி கொண்டு சோதனைகளை சாதனையாக மாற்றும் நாள்.

கன்னி

கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போகலாம். வேலைச் சுமையால் சோர்வு அடைய நேரிடலாம். அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

தனுசு

உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொழில் போட்டியின் காரணமாகக் குறையலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மகரம்

சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.‌

கும்பம்

குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனம் சிறு சிறு தொந்தரவு தரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். எனினும், தாயாரின் உடல் நிலையில் மட்டும் அதிக கவனம் தேவை. சிலருக்கு வீட்டுப் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். மொத்தத்தில், நன்மை தீமை கலந்து நடக்கும் நாள்.

மீனம்

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

RDK8sA

Advertisement
Advertisement