Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 28 ஜூலை 2026
BREAKING
சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு! ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!
Advertisement

இன்றைய ராசிபலன் (02-01-2026)

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.

Advertisement

ரிஷபம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். யோகா தியானத்தில் மனம் அமைதியாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

மிதுனம்

ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். மற்றவர்களுகாக சில செலவுகளை செய்து பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

Advertisement

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கன்னி

எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மறுமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். எடுத்த காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மன உளைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

yueKgq

Advertisement
Advertisement