Skip to content
Daily Tamilnadu
திங்கள், 21 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

ரூ.610 கோடியை பயணிகளுக்கு திருப்பி அளித்தது இண்டிகோ நிறுவனம்!

சமீபத்தில், நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் மணிக்கணக்கில் தாமதமானது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்ததுடன், விமான சேவை துறையில் குழப்பமும் ஏற்பட்டது.

இண்டிகோ நிறுவனம் இதற்காக மன்னிப்பு கேட்டாலும், மத்திய அரசு தீவிரமாக பதிலளித்து உடனடியாக பணத்தை திருப்பி வழங்க உத்தரவிட்டது. இதுவரை ரூ.610 கோடியை ரத்து மற்றும் தாமதமான விமான டிக்கெட்டுகளுக்காக பயணிகளுக்கு இண்டிகோ திருப்பி வழங்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும், விமானங்களை மறு அட்டவணைப்படுத்தும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. பயணிகளின் சொந்தமான 3,000 பொருட்கள் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சேவைகளை மீட்டெடுக்க மற்றும் பொருட்களை முழுமையாக வழங்குவதை உறுதி செய்ய, இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், விமான சேவை தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

XzYp5c