இன்றைய ராசிபலன் (29-07-2025)
மேஷம்
கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் . அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு பெருகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கடகம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பார்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.
விருச்சிகம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்க ளுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.
தனுசு
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்தபந்தங்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.
மகரம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
கும்பம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.
மீனம்
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
Posted in: ஜோதிடம்