ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (21-07-2025)

இன்றைய நாள் (21-07-2025)

விசுவாவசு-ஆடி 5-திங்கள்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 6:15 – 7:15

மாலை 4:45 – 5:45

கௌரி நல்ல நேரம்

காலை 9:15 – 10:15

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

ரோகிணி இரவு 9.08 வரை பின்பு மிருகசீருஷம்.

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன் :

மேஷம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எனினும் சிலருக்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

உங்கள் பேச்சில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள். இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை . வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும். மொத்தத்தில், நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

மீனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: