Skip to content
Daily Tamilnadu
புதன், 9 செப்டம்பர் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்?

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.

குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

Advertisement

நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும். மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.

ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். புதிதாக அகல் விளக்கு வாங்கி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என அகல் விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும்.

Advertisement

குலதெய்வ கோவிலுக்கு செல்ல இயலவில்லை எனில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து அவரை நினைத்து வழிபாடு செய்யலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

5JJXPF

Advertisement
Advertisement