×

வெள்ளிக்கிழமை நகங்களை வெட்டக்கூடாது என்று சொல்வது ஏன்?

Link copied to clipboard!

நம் முன்னோர்கள் சொல்லிவிட்ட சில செயல்களின் பொருள் உணர்ந்து பழக்கங்களை அறிந்து கொண்டால் அதன் மதிப்பு நமக்கு புரியும். அதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்தப் பதிவு.

செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம்.

Advertisement

அதேபோல செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி அன்று முடியோ நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று கூறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் செவ்வாய்க் கிழமைகளில் பெரும்பாலான முடிதிருத்த நிலையங்கள் இயங்குவதில்லை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய உகந்த நாள். அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக் கூடாது என்பது நம்பிக்கை.

நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே இழப்பு என்கிறபோது, உடலின் உறுப்பான நகத்தை இழப்பது பெரும் தவறு, இதனால் தான் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றனர் நமது முன்னோர்கள்.

Advertisement

Posted in: ஆன்மீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

flowers for god

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்!!

பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள்…

Link copied to clipboard!
வரலட்சுமி விரதம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது…

Link copied to clipboard!
திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் – பரிகாரங்கள்

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள்…

Link copied to clipboard!
யோக நரசிம்மர்

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல,…

Link copied to clipboard!
error: