×

சுமங்கலிகள் எவ்வாறு தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும்?

Link copied to clipboard!

நவராத்திரி சமயங்களிலும், பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பர். கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாகவும் அதை வாங்கும் சுமங்கலியும் மூன்று தேவியராகவும் இருக்கின்றன.

நாம் கொடுக்கும் தாம்பூலத்துடன் மற்ற பொருட்களையும் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் தேங்காய், மட்டையுடன் இருக்கும் தேங்காயாக கொடுக்க வேண்டும். இந்த மட்டை தேங்காய்க்குள் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது.அதாவது நாம் ஆணவம், மாயை, வன்மம் இவற்றை அகற்ற வேண்டும்.

Advertisement

ஆணவம் மட்டை தேங்காய், மாயை அதன் நார், வன்மம் ஓடு இவையெல்லாம் நீக்கினால் தான் வெண்மையான தேங்காய் கிடைக்கும். கொடுக்கும் சுமங்கலி நாருடன் கூடிய தேங்காயில் மஞ்சள் தடவி பூவை சுற்றி இருகைகளால் வாங்கும் சுமங்கலி பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். வாங்கும் சுமங்கலிகள் மடி ஏந்தி வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கொடுக்கும் சுமங்கலியிடமும், பெறும் சுமங்கலியிடமும் மூன்று தேவியரும் வாசம் செய்வதால் நாம் நினைக்கும் காரியங்களை, வரங்களை தேவியர் மூவரும் தங்கு தடையின்றி நமக்கு அருள்கின்றன.

ஆன்மீக தகவல்கள்

தாம்பூலத்தை கொடுப்பதிலும், வாங்குவதிலும் நன்மையே ஏற்படும். ஆகையால் நவராத்திரி சமயங்களில் ஒவ்வொரு சுமங்கலி பெண்ணிடமும் அம்பாள் இருக்கிறாள் என்றும், அம்பாளே பெண் உருவில் வந்து வாங்குகிறாள் என்றும் சொல்கிறார்கள்.

Advertisement

ஆகையால் தாம்பூலம் வாங்க கூப்பிட்டால் சந்தோஷமாக வாங்க சென்று நம் கோரிக்கைகளும் நிறைவேற அம்பாளை பிரார்த்திக்க வேண்டும். இந்த முறையில் தாம்பூலம் கொடுக்கிற சுமங்களையும், வாங்கும் சுமங்கலியும் கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

Posted in: ஆன்மீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

flowers for god

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்!!

பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள்…

Link copied to clipboard!
வரலட்சுமி விரதம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது…

Link copied to clipboard!
திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் – பரிகாரங்கள்

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள்…

Link copied to clipboard!
யோக நரசிம்மர்

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல,…

Link copied to clipboard!
error: