
இன்றைய நாள் (29-06-2025)
விசுவாவசு-ஆனி 15-ஞாயிறு-வளர்பிறை
நல்ல நேரம்
காலை 7:45 – 8:45
மாலை 3:15 – 4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 1:30 – 2:30
நட்சத்திரம்
ஆயில்யம் காலை 10.23 வரை பின்பு மகம்
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
பூராடம், உத்திராடம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை . வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.
மிதுனம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரி சில சூட்சுமங்களைப் சொல்லி தருவார். அமோகமான நாள்.
கடகம்
தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
சிம்மம்
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தின ரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்க ளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறை யும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
கன்னி
பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
விருச்சிகம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
தனுசு
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
மகரம்
தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். தெளிந்த சிந்தனையுடன் இருக்க வேண்டிய நாள்.
கும்பம்
ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர் நண்பர்கள் விஷயத்தில் வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.