
மேஷம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுபொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.
கடகம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அமோகமான நாள்.
கன்னி
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
தனுசு
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் சிலருக்கு ஆதாயம் உண்டு. வாகன வசதி உயரும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
மகரம்
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சிறப்பான நாள்.
மீனம்
எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கவனமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.