இன்றைய ராசிபலன் (24-07-2025)
                இன்றைய நாள் (24-07-2025)
விசுவாவசு-ஆடி 8-வியாழன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
கௌரி நல்ல நேரம்
காலை 12:15 – 1:15
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
புனர்பூசம் மாலை 6.11 வரை பின்பு பூசம்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
கேட்டை, மூலம்
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கியஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.
துலாம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.
விருச்சிகம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.
மகரம்
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.
கும்பம்
சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள்.
மீனம்
வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
Posted in: ஜோதிடம்