
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, அந்த நேரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி செய்ததா என்பது குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்தன. இந்த ஊகங்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் பதிலளித்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமீபத்தில் அதிகரித்த பதட்டங்களை அடுத்து, பெய்ஜிங் இஸ்லாமாபாத்திற்கு இராணுவ ஆதரவை வழங்கியுள்ளதா என்பது குறித்த ஊடக கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பதிலளித்தார்.
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடங்கியதிலிருந்து சீனா நடுநிலை வகித்து வருகிறது. இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினருக்கும் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். நிரந்தர போர் நிறுத்தத்தை ஊக்குவிப்பதிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் நாங்கள் ஆக்கபூர்வமான பங்கை வகிப்போம்,” என்று அவர் கூறினார்.