
பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நேற்று (ஜூலை 23) மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை லண்டன் சென்றடைந்தார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதாகும்.
முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.