தமிழ்நாடு

ஜனவரி 04, 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த மாதம் எதிர்பாராத உச்சத்தை தொட்டது. ஆனால், புது ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 4) தங்கம் விலை பல நாட்களுக்கு பின் அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ‌.360 குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,340க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.50,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.78க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty nine + = 39

Back to top button
error: