தமிழ்நாடு

பாமக தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் 3 ஆயிரம்.. கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

  • அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
  • தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும்.
  • அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
  • இதில் அனைத்து சமூகங்களுக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. இட ஒதுக்கீடு உச வரம்பு நீக்கக்கப்படும்.
  • மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம். மத்திய அரசு வருவாயில் சம பங்கு.
  • குறைந்தபட்சம் ஆதரவு விலை சட்டம். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை.
  • தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைத்தல்.
  • தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம். NLC நிறுவனம் வெளியேற்றப்படும்.
  • தமிழ்நாட்டில் மாவட்ட வேளாண் பொருளாதாரம் மண்டலம்.
  • நதிகளை இணைத்து நாட்டு மக்களையும் இணைப்போம்.
  • தமிழ்நாட்டில் மூன்று லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.
  • பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி.
  • மகளிருக்கு மாதம் 3 ஆயிரம் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம். விரைவில் எட்டாவது ஊதிய குழு அமைப்பு.
  • மாநில பட்டியலில் கல்வி. பள்ளி கல்விக்கு அதிக நிதி.
  • நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு. கல்விக் கடன் தள்ளுபடி.
  • அனைவருக்கும் இலவச மருத்துவம். மருத்துவக் கல்லூரி தொடங்க தடை நீக்கம்.
  • போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும்.
  • மாநிலங்களுக்கும் மதுவிலக்கு மானியம்.
  • ரூபாய் 10 லட்சம் வரை வரி இல்லை. பணக்காரர்களுக்கு கூடுதல் வருமான வரி.
  • ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும். பெட்ரோல் டீசலுக்கும் ஜிஎஸ்டி வரி.
  • மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு. இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்து.
  • தமிழ் இந்தியாவில் ஆட்சி மொழி. தமிழ் உயர் நீதிமன்ற அலுவல் மொழி.
  • திருக்குறள் தேசிய நூலாக்கப்படும்.
  • ஈழத் தமிழர்களுக்கு நீதி. தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு.
    வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்கப்படும்.
  • தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்றப்படும்.
  • இஸ்லாமியர்கள் கிருத்துவர்களுக்கு மக்கள் தொகை படி இட ஒதுக்கீடு.
    பிற பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ள இட ஒதுக்கீடு. நீதிபதி ரோகினி ஆணைய பரிந்துரை செயல்படுத்தப்படும்.
  • புதுவைக்கு மாநில தகுதி.
  • தர்மபுரியில் மா, தக்காளி, மரவள்ளி, பட்டுப்புழு வளர்ப்புக்கான மல்பரி ஆகியவற்றுக்கான சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
    திருச்சி மாவட்டம் வாழை மண்டலமாக அறிவிக்கப்படும்.
    கரூரில் வாழை, கோரைப்புல், முருங்கை மண்டலங்கள் அமைக்கப்படும்.
    அரியலூர் மாவட்டத்தில் பருத்தி, முந்திரி மண்டலமும், பெரம்பலூரில் சின்ன வெங்காயம் மண்டலமும் அமைக்கப்படும்.
  • கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசுத்துறை பொதுத்துறை பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் அறிக்கையில் பாமக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + one =

Back to top button
error: